ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ரன்பீர் கபூரும் கத்ரினா கைப்பும் காதலிப்பது பாலிவுட்டில் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கத்ரினாவோ, ரன்பீரோ அது பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் கூறிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ரஜ்பீருடனான திருமணம் பற்றி கத்ரினாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எங்கள் உறவு பற்றி தினசரி அப்டேட் செய்து வருகிறேன். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏதும் எனக்கில்லை. அதை பற்றி நினைப்பதற்கும் எனக்கு நேரமில்லை என கூறினார்.
முதலில் நழுவிய அவர் பின்னர் ஒருவழியாக அவர்களிடையேயான உறவை ஒப்புக் கொண்டார். அவர்கள் உறவு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த கத்ரினா, ரன்பீர் பற்றி இன்னும் தெளிவாக நான் சொல்ல வேண்டுமானால், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கம் அவர். எனது வாழ்க்கையில் அவர் பெரும் பங்கு வகிக்கிறார். இதன் அர்த்தம் எங்கள் ரசிகர்களுக்கு நன்றாக புரியும். மேலும் அவர்களை திருப்திபடுத்த இது போதுமான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.