ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சூது கவ்வும்'. வித்தியாசமான கதாபாத்திரங்கள், திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம் என இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அட்டகாசமாக நடித்து அவருடைய நடிப்பிபுத் திறமையின் இன்னொரு பரிமாணத்தையும் காட்டினார்.
அந்தப் படத்தை 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் 'கட்டம் கேங்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து முடித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர் நடித்திருக்கிறார். இடையில் இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், தற்போது படத்தை எடுத்து முடித்து அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் உதவியாளரான சந்தோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சஞ்சிதா ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தில் ஷீனா ஷகாபடி நடித்திருக்கிறார்.
ஷீனாவை, டாக்டர் ராஜசேகர் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் 'கட்டம் கேங்' படத்தின் புகைப்படம் தற்போது டோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜசேகர் நடித்து வெளிவர இருக்கும் இப்படத்தின் புகைப்படம் டோலிவுட்டையே 'ஷாக்' அடிக்க வைத்திருக்கிறது.