ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை சினிமாவாக படமாக்கப்பட இருக்கிறது, இதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். விரைவில் இதன்படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. முன்னதாக தோனியை வாழ்க்கையை படமாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது, இதனால் இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான நிலையில், தற்போது பிசிசிஐ, தோனியின் வாழ்க்கையை படமாக்க சம்மதம் வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறுகையில், கிட்டத்தட்ட எல்லா கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் தவிர்த்து விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நடித்து வருகின்றனர். அதை நாங்கள் கண்டு கொள்வதில்லை, எங்களுக்கு சம்பந்தப்பட்ட வீரர் போட்டியின் போது சரியாக விளையாட வேண்டும், அதைத்தான் நாங்கள் பார்ப்போம், ஆகையால் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
பிசிசிஐ., தரப்பில் இருந்து இப்படியொரு அறிவிப்பு வந்ததையடுத்து படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஹீரோ மட்டும் முடிவாகியுள்ளது, தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.