விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
நாளை (செப் 15) ஐ படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் முழுக்க முழுக்க வடசென்னை பகுதி மக்கள் பேசும் பிரத்யே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அந்தப் பாடலை எழுதிய கவிஞர் கபிலன் கூறியிருப்பதாவது:
படத்தின் கதைக்கு ஏற்றபடி வட சென்னை பேச்சுத் தமிழில் ஒரு பாடல் வேண்டும் என்று சங்கர் சார் கேட்டார். வடசென்னையை சேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக அந்த பாட்டு சூழல். இதற்காக வடசென்னை பகுதியில் ஒருவாரம் வரை சுற்றித் திரிந்து அந்த மக்களின் பிரத்யேக வார்த்தைகளை கண்டுபிடித்து அதை வைத்து அந்தப் பாடலை எழுயிருக்கிறேன். கொடைக்கானல் மலை உச்சியில் அமர்ந்து ஷங்கர் சாரும் நானும் இதை முடித்தோம். பாட்டை கேட்டுவிட்டு இந்த பாட்டு உங்களை உச்சத்திற்கு கொண்டு போகும் என்றார்.
நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா முட்டை
ஒரு மாட்டுகொம்பு மேல
பட்டாம்பூச்சி போல...
என்று அந்த பாட்டு தொடங்கும். இதை இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். அதே போல "என்னோடு நீயிருந்தால்.." பாடல் ஆண் பாடுவது போலவும் பெண் பாடுவது போலவும் எழுதியிருக்கிறேன். அந்த பாடல் இது...
என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத் தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர்போல
உன்னை தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?
இவ்வாறு கபிலன் கூறினார். இதற்கு முன் ஷங்கரின் பாய்ஸ், அந்நியன் படங்களுக்கும் கபிலன் பாடல் எழுதியிருக்கிறார்.