ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒருவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது சமீபகாலமாக பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. தி டர்ட்டி பிக்சர்ஸ், மேரி கோம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக தாதாவும், அரசியல்வாதியுமான அருண் காவ்லியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛‛டேடி'' என்ற படம் உருவாக இருக்கிறது. இதில் அருண் காவ்லியாக அர்ஜூன் ராம்பால் நடிக்க இருக்கிறார். பென்டகரம் பிலிம் நிறுவனத்துடன், சுனில் மனே நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சுமார் 3 வருடங்கள் அருண் காவ்லியை பற்றி பல்வேறு தகவல்களை சேகரித்து இந்தப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் கெளரவ் பவுதன்கர்.
இப்படத்தில் நடிப்பது குறித்து அர்ஜூன் ராம்பால் கூறுகையில், அருண் காவ்லியின் ரோலில் நடிப்பது மிகுந்த சவாலான ஒன்றாக எனக்க தோன்றுகிறது. நான் எனது தோற்றத்தை மட்டுமல்ல, அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரியும் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தமாதம் முதல் டாடி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.