'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம்...பர்மா படம் அல்ல, பர்மா படத்தின் இறுதியில் ரோலிங் டைட்டில் ஓடும்போது இடம்பெறும் காட்சிதான். பர்மா கார் பற்றிய படம் என்பதால், இறுதியில் சினிமா பிரபலங்கள் நிஜத்தில் பயன்படுத்தும் கார்களைக் காட்டியிருக்கிறார்கள்.
அமிதாப்பச்சன், ஷாருக்கான், இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், அனிருத், நடிகர்கள் சூர்யா, விஜய், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் பயன்படுத்தும் கார்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த வரிசையில் அஜித்தின் ஸ்விப்ட் காரும் காட்டப்படுகிறது. அஜித்தின் கார் காட்டப்படும்போது கைதட்டலில் தியேட்டரே அதிர்கிறது. காரணம்...நேற்று வந்த சிவகார்த்திகேயன், அனிருத், ஜி.வி.பிரகாஷ் எல்லாம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கிய கார்களை வைத்திருக்கும்போது, பல வருடங்களாக நடிகராக இருக்கும், அதுவும் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அஜித் சில லட்சங்கள் மட்டுமே மதிப்பு கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் வைத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கார் விஷயத்தில் அஜித்தின் எளிமை ரசிகர்கள் மத்தியில் அவரது இமேஜை எங்கேயோ கொண்டுபோய்விட்டது!