பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு? எங்கே இருக்கிறார்? | 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா |
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கயிருந்த படம் நண்பேன்டா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் காஜல் அகர்வால்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதோடு ரூ. 1 கோடியே 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அட்வான்சாக 40 லட்சமும் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், காஜல்அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லாததால், அவருக்குப் பதிலாக நண்பேன்டா படத்திற்கு நயன்தாராவை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார் உதயநிதி. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், நண்பேன்டா படத்துக்காக தான் கொடுத்த 40 லட்சம் பணத்தை காஜல்அகர்வாலிடம் உதயநிதி கேட்டபோது, மறுத்து விட்டாராம் காரணம் கேட்டதற்கு, நண்பேன்டா படத்திற்காக 40 நாட்கள் கால்சீட் ஒதுக்கியிருந்தேன். ஆனால் திடீரென்று என்னை நீக்கி விட்டதால் என்னால் உடனடியாக வேறு படங்களில் கமிட்டாக முடியவில்லை. இதனால் அந்த 40 நாட்களும் வீணாகி விட்டது என்று சொன்னவர், அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர மறுத்து விடடாராம்.
அதனால் தற்போது பணத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் உதயநிதி. அதைத் தொடர்ந்து காஜல்அகர்வாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவரிடமிருந்து பதில் வந்ததும் இந்த விவகாரத்தை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளார்களாம்.
ஆனால் இதுகுறித்து காஜல்அகர்வால் தரப்பில் விசாரித்தபோது, உதயநிதி அளித்த புகார் பற்றிய கடிதம் இன்னும் வந்து சேரவில்லை. அப்படி வந்ததும் உதயநிதி மீது நாங்களும் நடிகர் சங்கத்தில் புகார் அளிப்போம் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளாராம்.
ஆக இவர்கள் போடும் சண்டையைப் பார்த்தால், இந்த 40 லட்சம் விவகாரம் அத்தனை சீக்கிரத்தில் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.