35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
உதயநிதி ஸ்டாலின் தற்போது நயன்தாராவுடன் நடித்து வரும் நண்பேன்டா படத்தில், முதலில் காஜல் அகர்வால்தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் உதயநிதி கேட்ட தேதியை காஜல் அகர்வாலால் ஒதுக்கித் தரமுடியவில்லை. அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தார். இரண்டு மாதம் வரை காத்திருந்த உதயநிதி நயன்தாராவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.
கொடுக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் முன்பணத்தை உதயநிதி பலமுறை கேட்டும் காஜல் திருப்பித் தரவில்லை. அவர் தர ஒப்புக் கொண்டாலும் அவரது அம்மா கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உதயநிதி பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கம் காஜல் அகர்வாலிடமும், அவரது அம்மாவிடமும் உதயநிதி புகார் குறித்து விசாரணை நடத்தி உள்ளது.
"நண்பேன்டா படத்திற்கு கொடுத்த தேதியை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நண்பேன்டாவுக்கு தேதி ஒதுக்கியதால் அந்த நேரத்தில் வந்த ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் முன் பணத்தை திருப்பித் தரமுடியாது" என்று காஜல் அகர்வால் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. "இந்த பதிலை எழுத்துபூர்வமாக தயாரிப்பாளர் சங்கம் கேட்டுள்ளது. அது கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும். அல்லது பிரச்னையை நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிவிடும்" என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது.