ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை குடம் குடமாக பாலை தங்களது அபிமான ஹீரோக்களின் கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்வதைத்தான் காலம்காலமாக செய்து வருகிறார்கள். குடிக்க வேண்டிய பாலை இப்படியெல்லாம் ஊற்றி வீணடிக்காதீர்கள் என்று எந்த ஹீரோக்களும் அவர்களை கேட்டுக்கொண்டதில்லை.
ஆனால், இப்போது இநதிய சினிமா உலகில் வைரஸாக பரவியுள்ள ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பால் பாக்கெட் சேலஞ்சு என்பதை அறிவித்துள்ளனர். அதாவது, பால் பாக்கெட் வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை குடும்பங்களாக பார்த்து அவர்களுக்கு பால் பாக்கெட் வாங்கி கொடுத்து வருகிறார்களாம். கடந்த 2 நாட்களாக இந்த விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
மேலும், தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் பால் பாக்கெட் மட்டுமின்றி, உணவு , உடை, புத்தகம் என்று ஏழை மக்களின் தேவை அறிந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்களாம். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் பேன்ஸ் சேலஞ்ச் என்று இந்த சவாலுக்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்களையும் அழைத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இந்த சவாலை எதிர்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.