ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரசன்னா, லேகா வாஷிங்டன் இணைந்து நடித்த கல்யாண சமையல் சாதம் படம் கடந்து ஆண்டு வெளிவந்தது. ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கி இருந்தர். அபி அண்ட் அபி நிறுவனமும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்து.
தனக்கு ஆண்மைகுறைவு இருப்பதாக நம்பும் ஒரு இளைஞனுக்கு திடீரென்று திருமணம் நடந்து விடுகிறது. அவன் புதுமனைவியை எப்படி சமாளிக்கிறான் என்கிற செக்சுவல் காமெடி கதை. தமிழில் சுமாராக ஓடியது. இப்போது இந்தப் படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், ஒய் நாட் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.
இதுகுறித்து சி.வி.குமார் கூறியதாவது: கல்யாண சமையல் சாதம் போன்ற செக்சுவல் காமெடி படங்களுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் இதனை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறோம். தமிழில் இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னாவே இந்தியிலும் இயக்குகிறார். நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள் யார் என்பது பற்றி பேசி வருகிறோம். வருகிற ஜனவரி மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. என்றார்.