மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
1986ல் மணிரத்னம் இயக்கிய படம் மெளனராகம். கார்த்திக், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா அப்படத்துக்கு இசையமைத்திருந்தார். ஆக படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டானதோடு, அப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.
அந்த படத்தை இப்போது மணிரத்னம் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கயிருந்த மணிரத்னம், அந்த முயற்சி ஒர்க்அவுட் ஆகாததால் இப்போது தான் இயககிய மெளனராகத்தையே ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதில் கார்த்திக் நடித்த வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மானை நடிக்க வைக்கிறாராம்.
மேலும், ரேவதி கதாபாத்திரத்திற்கு நித்யாமேனனை ஓ.கே செய்திருப்பவர், மோகன் நடித்த வேடத்துக்கு இன்னும் எந்த நடிகரையும் தேர்வு செய்யவில்லையாம். அதோடு, ஏ.ஆர்.ரகுமான். பி.சி.ஸ்ரீராம் என பெரிய செட்டப்போடு அந்த படத்தில் இறங்கும் மணிரத்னம், கதையில் இன்றைய சூலுக்கேற்ப சில மாற்றங்களையும் செய்துள்ளாராம்.