Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவை டைரக்டர் ஆக சொன்ன எஸ்.தாணு!

06 செப், 2014 - 09:21 IST
எழுத்தின் அளவு:

படங்களை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பவர் எஸ்.தாணு. அதேபோல் படங்களின் ப்ரமோஷன் விசயங்களிலும் அதிக மெனக்கெடுவார். அதனால் அவரது அதிரடியான பப்ளிசிட்டிகளுக்காகவே அவர் வெளியிடும் படங்கள் வெற்றி பெற்று விடும். அதனால்தான் தாணு வெளியிடும் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் மற்ற படங்கள் தானாக பின்வாங்கி விடும்.


அப்படிப்பட்ட தாணு, நேற்று சென்னையில நடைபெற்ற போக்கிரி மன்னன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். அதையடுத்து அவர் பேசும்போது, நான் தயாரித்த விஐபி படத்தில் பிரபுதேவா நடித்தபோது, உன்னால் படம் இயக்க முடியும். அதனால் சீக்கிரம் படம் டைரக்ட் பண்ணு என்று பிரபுதேவாவிடம் சொன்னேன். அதுவரை நடன மாஸ்டராகவும், ஹீரோவாகவும இருந்த அவர் பின்னர், படங்கள் இயக்கத் தொடங்கி இப்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக இருக்கிறார்.


அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ள நடன மாஸ்டர் ஸ்ரீதரை பார்க்கும் போதெல்லாம், சீக்கிரம் படம் இயக்குங்கள் என்று கூறியிருக்கிறேன். அதனால் நான் சொன்ன வாய் முகூர்த்தம் இப்போது ஹீரோவாக அரிதாரம் பூசியிருக்கும் அவர், விரைவிலேயே படம் இயக்குவார் என்று கூறிய எஸ்.தாணு, ரஜினி நடித்த படம் மன்னன், விஜய் நடித்த படம் போக்கிரி. அந்த இரண்டு டைட்டிலையும் சேர்த்து இந்த படத்துக்கு போக்கரி மன்னன் என்று பெயர் வைத்துள்ளனர். அதனால் இந்த படம் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகிவிட்டது என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in