Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் மோனல் கஜார்!

05 செப், 2014 - 16:31 IST
எழுத்தின் அளவு:

தமிழ்சினிமாவில் பெரிய அளவில் ரவுண்டு வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நடிகை மோனல் கஜார். மிஸ்.குஜராத், மிஸ் மிர்ச்சி குயின் பீ ஆகிய அழகிப்போட்டிகளில் டைட்டில் வென்ற மோனல் கஜார், டிராகுலா என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்த மோனல் கஜார் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொகுப்பாளர் மாகாபா ஆனந்தும் இப்படத்தில் நடித்திருக்கிறார். ராஜமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆனாலும் இப்படம் பிசினஸ் ஆகாமல் பல மாதங்களாக கிடந்தது.


இதற்கிடையில் யுடிவி தயாரிப்பில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சிகரம் தொடு படத்தில் கமிட்டானார் மோனல் கஜார். ஏடிஎம் கொள்ளையை மையமாக வைத்து தூங்கா நகரம் கௌரவ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தைப் போலவே சிகரம் தொடு படமும் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகுதான் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது.


தான் நடித்த இரண்டு படங்களுமே முடங்கிக்கிடப்பதை எண்ணி வருத்தத்தில் இருந்தால் மோனல் கஜார். இப்போது வருத்தமெல்லாம் போயேபோச்சு! ஏன்? மோனல் கஜார் நடித்த வானவராயன் வல்லவராயன்,சிகரம் தொடு ஆகிய இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில், அதாவது வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. செம குஷியில் இருக்கிறார் மோனல் கஜார்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in