ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் காதலித்துக் கொண்டிருந்த போது இணையங்களில் சிம்புவும், நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தம் பதித்துக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. அவை படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல, நிஜப் புகைப்படங்கள்தான் என்பது அப்போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பின் இணையங்களில் சிம்புவும், பிரபல நடிகரின் மகள் ஒருவருடன் சிம்பு தொலைபேசியில் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ அதிகமாகப் பரவி ஒரு பரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட விஷயங்களை சிம்புதான் வேண்டுமென்றே 'லீக்' செய்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இதனிடையே கடந்த சில தினங்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி ஒரு பரபப்பை ஏற்படுத்தியுள்ளன. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது.
அதன் பின் விசாரித்த போது, அந்தப் புகைப்படம் சிம்பு நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியின் புகைப்படம் என்ற தகவல் கிடைத்தது. இருந்தாலும் அப்படிப்பட்ட புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக யாரும் வெளியிட வாய்ப்பேயில்லை. இருந்தாலும் படத்தை சிம்புவின் அப்பாவே தயாரிப்பதால் அவர்களுக்குத் தெரியாமல் யாரும் இதை வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள்.