ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு இயக்குனரின் புதிய படம் முடியும் தருவாயில் வரும் போதே அவர்கள் அடுத்த படத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சில வாரங்கள் மட்டும் ஓய்வு எடுத்து விட்டு அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பித்து விடுவார்கள். இயக்குனர் ஷங்கர் தற்போது 'ஐ' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி வேலைகளுக்கிடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள 'ஆகாடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது ஆச்சரியமளிப்பதாக உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் கருதுகின்றன.
பொதுவாக, தெலுங்குத் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க மாட்டார்கள். அப்படியிருக்க ஷங்கர், மகேஷ் பாபு படத்தின் விழாவில் கலந்து கொண்டதுதான் ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். 'ஐ' படம் வெளியான பின் ஷங்கர் யாரை வைத்து படத்தை இயக்குவார் என்பது இன்னும் சரியாகத் தெரியாத நிலையே உள்ளது. அவர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
விஜய்யும் இயக்குனர் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு வேளை ஷங்கர், மகேஷ் பாபு பட விழாவில் கலந்து கொண்டது கூட அவர் அடுத்து இயக்கப் போகவது மகேஷ் பாபுவைத்தான் என டோலிவுட் வட்டாரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே, மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், கடைசியில் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. அதனால், ஷங்கர் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்பதாவது உண்மையாக நடக்குமா என்பதை இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.