மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்தவர் சரயு. தமிழில் நடிக்க ஆர்வாக இருந்தவருக்கு சண்டமாருதம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணத்தாலோ சரயுவை நீக்கிவிட்டு ஓவியாவை நடிக்க வைத்தார்கள்.
சரயுவுக்கு சண்டமாருதம் தராத வாய்ப்பை நிலா நகர் என்ற படம் வழங்கி உள்ளது. நிலா புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் துரை சுதாகர் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சரயு நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார், பரணி இசை அமைக்கிறார்.
"ஒரு கவிஞர் சோழ மண்டலமான தஞ்சை பகுதிக்கு வருகிறார். தஞ்சை பகுதியின் அவலங்களை பாடல்களாக எழுதுகிறார். அங்கு அவருக்கு அறிமுகமாகும் ஹீரோயின் காதல் கொள்கிறார். கவிதையா, காதலா, சமூகமா கவிஞர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கதை. தஞ்சை மாவட்ட பகுதிகளில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது" என்கிறார் இயக்குனர் பி.ஜெய்கார்த்திக்.