ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த ரோஜா, மார்க்கெட் போனதும் தெலுங்கு தேச அரசியலுக்குப்போனார். அதன் பின்னர் அக்கா, அண்ணி, வில்லி கேரக்டரில் நடித்தவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடத்திய லக்கா கிக்கா கேம் ஷோவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஒரு வருடத்திற்கு மேலாக நிகழ்ச்சியை நடத்தினார்.
பார்லிமென்ட் தேர்தலும், ஆந்திர சட்டமன்ற தேர்தலும் வந்ததால் அதில் போட்டியிடுவதற்காகவும், பிரச்சாரம் செய்வதற்காகவும் செல்ல வேண்டியது இருந்ததால் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்று விட்டார். தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டார். ஆனால் அவர் சார்ந்த கட்சி பெரும் தோல்வியை சந்தித்து விட்டது. ஜெயித்திருந்தால் ரோஜா அமைச்சராகும் வாய்ப்புகூட இருந்தது. இப்போது வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மீண்டும் லக்கா கிக்கா நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.
நிகழ்ச்சியில் சில மாற்றங்களுடனும், புதிய அம்சங்களுடனும் படப் பதிவு செய்யப்பட்டது. புதிய உற்சாகத்துடன் ரோஜா நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த 30ந் தேதி முதல் லக்கா கிக்காவின் புதிய பகுதி ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு லக்கா கிக்கா ஒளிபரப்பாகிறது.