ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வட சென்னையை கதை களமாக வைத்து மெட்ராஸ் படம் உருவாகிறது. இது வடசென்னை லோக்கல் பையன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிற கதை. பூலோகம் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை சூதாட்டம் பற்றிய கதை. அடுத்து இப்போது பர்மா. இது வடசென்னையில் செழித்தோங்கி நடக்கும் கார் கந்துவட்டி பைனான்ஸ் கதை. கார் கந்துவட்டி பற்றி வரும் முதல் கதையும் இதுதான்.
அதுல்குல்கர்னியும், சம்பத்ராஜும் கார் பைனான்ஸ் தாதாவாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு போட்டியாக வளரும் தாதா பர்மாவாக மைக்கேல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார். மலையாள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் கனி என்ற நடிகை வில்லியாக நடித்திருக்கிறார்.
"வட சென்னை கார் தாதாயிசம் பற்றியும் அந்த தொழிலில் உள்ள விரோதம், குரோதம் பற்றி இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை. சினிமாவுக்கான அத்தனை இலக்கணங்களையும் அடித்து நொறுக்கி புதிதாக இயக்கி உள்ளேன். செப்டம்பரில் ரிலீசாகிறது" என்கிறார் இயக்குனர் தரணிதரன்.