விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜெயராம். மலையாள நடிகரான இவர் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். குணசித்திரம் மட்டுமின்றி காமெடி ரோல்களில் நடிக்கிறார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இவரது காமெடி ரோல் ஓரளவு பேசப்பட்டது. அதையடுத்தும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது மகன் காளிதாஸை தமிழில்தான் அறிமுகம் செய்வேன் என்று கடந்த ஒரு வருடமாக கூறி வந்த ஜெயராம், இப்போது விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கும் ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார்.
தனது முந்தைய படத்தைப்போன்று இந்த படத்தையும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருக்கும் பாலாஜி தரணீதரன், இந்த படத்திற்கான கதாநாயகியை பரிசீலனை செய்து வருகிறார். மற்ற டெக்னீஷியன்கள் அனைவரும முடிவாகி விட்டநிலையில், நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆர்யா-நயன்தாராவை வைத்து தயாரித்த ராஜா ராணி படத்தை தொடங்கி வைத்த கமல், அடுத்தபடியாக இந்த படத்தின் முதல் காட்சியை தனது ராசியான கைகளால் கிளாப் அடித்து துவக்கி வைக்கிறாராம்.