விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
1965ம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். வெளியான ஆண்டே 175 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கண்ட படம். இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம். இப்போது படம் ஆல்பர்ட் காம்பளக்சிலும், சத்தியம் காம்பளக்சிலும் தினமும் ஒரு காட்சியாக 175 நாளை தொட்டுவிட்டது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் சாதித்திருக்கிறார். வருகிற 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தி இந்த வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள்.