சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |
இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தான் தலைவராக உள்ள ஃபிக்கி எனப்படும் இந்திய வர்த்தக-தொழில் கூட்டமைப்பு பங்கேற்காது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மே17 என்ற இயக்கத்தை சேர்ந்த சிலர் கமல்ஹாசன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது இலங்கை பட விழாவுக்கு ஃபிக்கி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும், ஃபிக்கி பொறுப்பில் இருந்து கமல்ஹாசன் விலக வேண்டும் என்றெல்லாம் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கமலிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
"தமிழ் உணர்வாளர்களே... ஃபிக்கி என்ற அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும். உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.
என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர். அவை நான் தென்னக ஃபிக்கி தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.
தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், ஃபிக்கி தலைமை, ஃபிக்கி பொழுதுபோக்கு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து கொழும்பு விழாவுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.
மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது ஃபிக்கி போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியை செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன். ஃபிக்கி விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் ஃபிக்கி கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக ஃபிக்கி தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!.
இவ்வாறு கமல்ஹாஸன் கூறியுள்ளார்.