ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக காவ்யா ஷெட்டி நடிக்கிறார். காவ்யா ஷெட்டி ஏற்கெனவே தெலுங்கில் நடித்த ஷிவானி படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். வாராயோ வெண்ணிலாவே படத்தில் நடித்தார். தற்போது அவம் என்ற படத்தில் நடித்த வருகிறார்.
விஜய் படத்தில் நடிப்பது பற்றி காவ்யா ஷெட்டி கூறியதாவது: எனது முந்தைய படங்களை பார்த்து விட்டு விஜய் என்னை அழைத்து பேசினார். இரண்டு முறை அவரை சந்தித்தேன் எனது கேரக்டர் பற்றிச் சொன்னார். ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. அதைத் தொடர்ந்து ஒர்க்ஷாப்பும் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன் என்றார்.