Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓணம் பண்டிகைக்கு வெளிவரும் மலையாளத் திரைப்படங்கள்...

25 ஆக, 2014 - 10:39 IST
எழுத்தின் அளவு:

கேரள மாநிலத்தின் சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் மலையாள மக்களால் கொண்டாடப்பட இருக்கிறது. மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஓணம் அன்று வெளியாகும் படங்களும் சிறப்பு கவனத்தைப் பெறும். அந்த விதத்தில் இந்த வருட ஓணத்தை முன்னிட்டு 5 மலையாளப் படங்கள் வெளியாக உள்ளன.

பெருச்சாழி - தமிழில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கியவரும் 'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தயாரித்தவருமான அருண் வைத்தியநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அமெரிக்காவில் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளதாம்.


ராஜாதி ராஜா - மோகன்லால் படம் வரும் போது மம்முட்டி படம் இல்லாமலா...அஜய் வாசுதேவ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப் படம் முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகவே உருவாகி உள்ளது.


வில்லாளி வில்லன் - அறிமுக இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் திலீப், நமீதா பிரமோத், மைதிலி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திலீப் இதற்கு முன் நடித்து வெளியான 'அவதாரம்' படம் பெரிய வெற்றியைப் பெறாததால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளாராம்.


பைய்யா பைய்யா - ஜானி ஆண்டனி இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், பிஜு மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் முற்றிலும் ஒரு பொழுதுபோக்குப் படமாகவே தயாராகியுள்ளதாம்.


சபத்மஸ்ரீ தஸகரஹா - தேசிய விருது பெற்ற இயக்குனரான அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள படம். படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதாலும், சிறந்த இயக்குனரின் படம் என்பதாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.


இந்த வருட ஓணம் வெளியீடுகளில் நிறையவே போட்டி உள்ளதாக மலையாளத் திரையுலகம் கருதுகிறது. மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் வருவதால் வசூலும் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in