ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விமல் நடித்த இஷ்டம் படத்தில் நாயகியாக நடித்தவர் நிஷா அகர்வால். பிரபல நடிகை காஜல்அகர்வாலின் தங்கையான இவர் அக்காளின் சிபாரிசின் பேரில் பெரிய நடிகையாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் படமே தோல்வியாக அமைந்ததால், முதல் கோணல் முற்றும் கோணல் கதையாகி விட்டது. அதன்பிறகு நிஷாவுக்கு தமிழில் ஒரு படம்கூட கிடைக்கவில்லை.
அதனால் அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். இருப்பினும், சினிமாவில் எதிர்காலம் அவருக்கு மங்கலாகவே தெரிந்தது. அதனால், ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்ததால் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் நுழைந்தார் நிஷா அகர்வால். இருப்பினும், அவரது அடி மனதிற்குள் இருந்த சினிமா ஆசை அவரை விடவில்லை. அரிதாரம் பூசும் ஆசையை தூண்டிக் கொண்டேயிருந்ததால் தற்போது கணவரின் அனுமதியுடன் மலையாளத்தில் பாக்யா பாக்யா, தெலுங்கில் டி.கே போஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் ஹோம்லியான வேடங்களில் நடிக்கவே நிஷா அகர்வால் ஒப்பந்தமான போதும், பாடல் காட்சிகளில் காஜல் அகர்வால் ரேஞ்சுக்கு ஓரளவு கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்களாம். அதற்கு, என் அக்காளின் உடல்கட்டு கவர்ச்சிக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் என் உடலமைப்பு பொருந்தாது.
அதுமட்டுமின்றி, என் கணவர் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்ற கண்சனின் பேரில்தான் நடிக்கவே ஒத்துக்கொண்டார். ஆக, அதை மீறினால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்று தனது நிலையை சொல்லி கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டாராம் நிஷா அகர்வால்.