ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினி, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மங்களூரு வந்திருந்தார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை வழக்கம் போல் பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்து சரமாரி கேள்விகளை கேட்டனர்.
பத்திரிக்கையாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.
லிங்கா படம் பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து வழக்கமான ரஜினியிடம் கேட்கும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார். தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு நகர்ந்தார், ரஜினி.
ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் லிங்கா படத்தில் கஜபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்புக்கள் முடிந்து விட்டதாம். இறுதிகட்டமாக 21 நாட்கள் படப்பிடிப்பை மங்களூருவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.