அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
நடிகை ஊர்வசியும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜலட்சுமி என்ற 14 வயது மகள் இருக்கிறாள். கடந்த பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்த இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர். மகள் தேஜலட்சுமி தந்தையுடன் சென்று விட்டார். மனோஜ் கே.ஜெயன் ஆஷா என்ற நாட்டிய கலைஞரைத் திருமணம் செய்து கொண்டார்.
சென்னை வீட்டில் தனிமையில் வசித்து வந்த ஊர்வசிக்கு கட்டிட காண்டிராக்டர் சிவபிரசாத் நண்பரானார். நட்பு காதலாகி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் கர்ப்பமான ஊர்வசி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.