ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது ஒரு மகனுக்கும், மகளுக்கும் தாயாக இருக்கிறார். 2010ம் ஆண்டு நடித்த மை நேம் இஸ் கான்தான் கஜோல் ஹீரோயினாக நடித்த கடைசி படம்.
4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கஜோல். பிரபல விளம்பர பட இயக்குனர் ராம் மத்வானி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கஜோலை வைத்து நிறைய விளம்பர படங்களை இயக்கியவர். கஹானி, இங்கிலீஸ் விங்கிலீஸ், குயின், மர்தாணி பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். இதற்கிடையில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் கஜோல் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் கேமரா முன் நிற்க முடிவு செய்து விட்டார் கஜோல்.