தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
காமெடி நடிகர் சுருளி மனோகர் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 51. சின்னத்திரையில், மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் சுருளி மனோகர். பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகி படிக்காதவன், சுறா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான், புதுமுகங்களை வைத்து ''இயக்குநர்'' என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையி்ல், சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த சுருளி மனோகர் இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) மதியம் 1.30 மணியளவில் திடீரென மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும், கோமதி, சரண்யா, சங்கீதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். சுருளி மனோகரின் இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது.
கஷ்டப்படுகிற குடும்ப பின்னணியில் இருந்து வந்து நடிகராக, காமெடி நடிகராக, படிப்படியாக முன்னேறி, இயக்குநராக உயர்ந்து வந்த நிலையில், அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.