மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருக்கும். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் அப்படிப்பட்ட பொழுதுபோக்கில்தான் அனைவரும் ஈடுபடுவோம். ஆனால், பொழுதுபோக்கையே உருப்படியாக செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பவர். அவர்களில் 'கலெக்டர்கள்' என அழைக்கப்படும் பொருட்களை சேகரிப்பவர்கள் முக்கியமானவர்கள். விதவிதமான கலைப் பொருட்களையோ, பேனாக்கள், கேமிராக்கள், ஸ்டாம்புகள், இப்படி எதையாவது சேகரிப்பதையோ பழக்கமாக சிலர் வைத்திருப்பவர். நடிகைகளில் இப்படிப்பட்ட பழக்கம் உடையவர்களைப் பார்ப்பது ஆச்சரியம்தான்.
முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசனும் இப்படிப்பட்ட பழக்கம் உடையவர்தானாம். அவருக்கு விதவிதமான பொம்மைகளைச் சேகரிப்பது மிகவும் பிடிக்குமாம். சிறு வயதிலிருந்தே தான் இப்படி சேகரித்து வருவதாக அவர் சொல்கிறார். “சிறு வயதிலிருந்தே அனிமேஷன் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே நான் அனிமேஷன் கதாபாத்திரங்களின் பொம்மைகளைச் சேர்த்து வருகிறேன். சம்பாதிக்க ஆரம்பித்ததும் அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்து விட்டேன். குறைந்த அளவிலே வெளிவந்த அபூர்வமான விலை உயர்ந்த பொம்மைகளைக் கூட வைத்திருக்கிறேன். இவற்றில் சில பரிசாக வந்தன, சிலவற்றை ஆன்லைன் மூலமும், வெளிநாடு செல்லும் போதும் வாங்குவேன்,” என்கிறார்.
ஒரு அழகான பொம்மையே, பொம்மையை சேகரிக்கிறதே....என்று கவிதையாக முடித்தால்தான் இந்த செய்தியும் நிறைவு பெறும்....!!!