14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பிரஷாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர்தான் த்ரிஷா. ஆனால் அதையடுத்து சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாகி விட்டார். அதையடுத்து ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம், விக்ரம் நடித்த சாமி என வரிசையாக கதாநாயகியாக நடித்து குறுகிய காலத்திலேயே வியாபார வட்டத்துக்குள் வந்து விட்டார். அதோடு, அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, ஆர்யா என மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்தவர், இப்போதுவரை அதே ரேஞ்சில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போதுகூட அஜீத், ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிம்புவுடன் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக அவருக்கு படங்கள் பெரிதாக இல்லாததால், தற்போது 31 வயதாகும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரைக்குப்பின்னால் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த தகவலை த்ரிஷாவுக்கு வேண்டப்பட்டவர்கள் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், தற்போது அதுபற்றி தனது நெருங்கிய ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு என்னைப்பற்றி திருமண வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிய விசயமில்லை. அவ்வப்போது யாராவது இப்படி கொளுத்திப்போட்டு விடுகிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் அவ்வப்போது பரவும் இந்த திருமண செய்தியைப்பற்றி யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக என்னை படங்களுக்கு புக் பண்ணுவதை தவிர்க்க வேண்டாம். நான் திருமணம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் உள்ளது என்று தெளிவுபடுத்தி வருகிறார் த்ரிஷா.