ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்தவர் இப்போது லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3-யான கங்காவில் நடித்து வருகிறார். இவைதவிர வை ராஜா வை, இந்தியில் ஒருபடம் என்று பிஸியாக இருப்பவர், தற்போது ஓய்வுக்காக தனது சகோதரியுடன் கிரீஸ் சென்றுள்ளார். அப்படியே அங்கு தனது 27வது பிறந்தநாளை நேற்று(ஆகஸ்ட் 1ம் தேதி) சிறப்பாக கொண்டாடினார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது, இந்தாண்டு முழுக்க நான் பிஸியாக இருக்கிறேன். அதனால் கிடைத்த கொஞ்ச ஓய்வு நேரத்தை கிரீஸில் கொண்டாடி வருகிறேன். அடுத்தாண்டு இங்கு வருவேனா என்பது தெரியாது. பொதுவாக நான் எனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடுவது கிடையாது. எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வீட்டிலேயே கொண்டாடுவேன். மேலும் நான் பார்ட்டியை விரும்பாதவள், அது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், இந்தாண்டு எனது பிறந்தநாளை எனது சகோதரியுடன் கிரீஸில் கொண்டாட முடிவு செய்தேன், சிறப்பாக கொண்டாடினேன், ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியா திரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.