'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அண்ணன் இயக்கும் படங்களில் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்கள் தவிர லீமா, இளவரசு, ரேகா, ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரேம்ஜியே இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.ராஜா இயக்கி உள்ளார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
ஒரு விஞ்ஞானி, வாழ்ந்து மறைந்த ஒருவரை நிகழ்காலத்துக்கு கொண்டு வரும் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். அதன் உதவியுடன் அவர் 1950களில் வாழ்ந்த பாகவதர் ஒருவரை இந்த காலத்துக்கு அழைத்து வருகிறார். எதையும் பாடலாகவே பேசும் அவர். நீண்ட தலைமுடி, ஜிப்பா என வித்தியாசமான அவர் இந்தக் காலத்து மக்களுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக காட்டுகிற படம்.
படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்து விட்டது. மாங்கா விற்பனைக்கும் ரெடியாகிவிட்டது. இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.