ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
எம்.ஆர்.ராதாவின் புகழ்பெற்ற நாடகம் ரத்தக்கண்ணீர். 1940களில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் நடத்தப்பட்ட நாடகம். சீர்திருத்த கருத்துக்களை தாங்கி வந்த இந்த நாடம்தான் திராவிட சீர்திருத்த நாடகங்கள், மற்றும் திரைப்படங்களுக்கு முன்னோடி. இந்த நாடகம் 1954ம் ஆண்டு திரைப்படமாக வந்தது. அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். ரத்த கண்ணீர் திரைப்படமாக ஓடும் ஊரிலேயே நாடகத்தையும் நடத்துவார். சினிமாவை விட நாடகம் பார்க்க கூட்டம் அலைமோதும்.
எம்.ஆர்.ராதாவின் மறைவுக்கு பிறகு அவரது மூத்த மகன் எம்.ஆர்.ஆர்.வாசு ரத்தகண்ணீர் நாடகத்தை நடத்தினார். அதன் பிறகு இளைய மகன் எம்.ஆர்.ராதாரவி நடத்தினார். அதன் பிறகு எம்.ஆர்.ஆர்.வாசுவின் மூத்த மகனான வாசு விக்ரம். அதாவது எம்.ஆர்.ராதாவின் பேரன் ரத்தக்கண்ணீரை நடத்தினார். தற்போது எம்.ஆர்.ஆர்.வாசுவின் இளைய மகன் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் ரத்தக்கண்ணீரை நடத்த இருக்கிறார். அவரே தாத்தா நடித்த வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
வருகிற 12ந் தேதி வாணி மஹாலில் இதன் அரங்கேற்றம் நடக்க இருக்கிறது. ஒரே நாடகத்தை எம்.ஆர்.ராதாவின் 5 வது வாரிசும் நடத்த இருப்பதும், வாரிசுகள் அனைவருக்குமே எம்.ஆர்.ராதாவின் குரலும், உடல் மொழியும் தொடர்ந்து வருவது ஆச்சர்யங்களில் ஒன்று.