ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இணையாக வலம் வந்தவர்கள் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட்டுகள். டப்பிங் காலம் தொடங்கும் முன் ஜேம்ஸ் பாண்டுகள் ஆங்கிலம் பேசிய காலத்திலும் ஜேம்ஸ் பாண்டின் சூப்பர் ஆக்ஷன் காட்சிகளையும், லிப் லாக் கிஸ்சுகளையும், ஹீரோயினின் பிகினி டிரஸ்சையும் பார்த்து விசிலடித்து ரசித்தான் தமிழ் ரசிகன்.
இன்றைக்கும் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மதிப்பு குறையவில்லை. அதற்கென்று தனி ரசிகர்கள் வட்டமும் உண்டு. தற்போது வெளிவரும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டே வெளிவருகிறது. ஆனால் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் டப் செய்யப்படவில்லை. அப்படிப்பட்ட பழைய படங்களை தமிழில் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவரத் துவங்கியது. முதலில் வெளிவந்தது டாக்டர் நோ என்ற படம். துப்பறிவாளன் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கியது பிளெமிங் என்ற எழுத்தாளர். அவரது துப்பறியும் நாவலில் வலம் வந்த ஜேம்ஸ்பாண்ட் 007 கேரக்டர்தான் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா கேரக்டர் ஆனது.
ஜீ தமிழ் டாக்டர் நோ படம் முதல் சமீபத்தில் வெளிவந்த ஸ்கைபால் வரை ஜேம்ஸ்பாண்டின் 24 படங்களையும் தமிழில் டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முதல் படமாக இன்று- இரவு (ஆகஸ்ட் 2) ஸ்கைபால் படம் ஒளிபரப்பாகிறது.