ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
அஜித் நடித்த 'அமர்க்களம்', 'அசல்', விக்ரம் நடித்த 'ஜெமினி', கமல்ஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உட்பட பல படங்களை இயக்கியவர் சரண். கே.பாலசந்தரின் சிஷ்யரான சரண், காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கியவராக, வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தார். ஏவிஎம் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் சரண் இயக்கிய ஜெமினி படம் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் படமாகி, சரணை முன்னணி கமர்ஷியல் டைரக்டராக மாற்றியது.
ஜெமினி படத்தின் நினைவாக ஜெமினி புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சொந்தமாக படங்களை தயாரிக்கத் தொடங்கினார் சரண். சொந்தப்படத்தை எடுக்க ஆரம்பித்த சரணுக்கு சறுக்கல்கள் தொடங்கின. பல கோடி கடனாளி ஆனார். அதன் காரணமாக அவரை வைத்து யாரும் படம் தயாரிக்க முன் வராத காரணத்தினால் திரையுலகிலிருந்தும் காணாமல் போனார் சரண்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார். கடைசியாய் அவர் இயக்கிய மோதிவிளையாடு படத்தில் நடித்த வினய் தான் இப்படத்தின் ஹீரோ.
இந்தப் படத்துக்கு முதலில் செந்தட்டி காளை செவத்த காளை என்று பெயர் வைத்திருந்தார் சரண். காரணம்..படத்தில் வினய்க்கு இரண்டு வேடங்கள். காரணப்பெயராக செந்தட்டி காளை செவத்த காளை என்று அவர் பெயர் வைத்தாலும், அந்த தலைப்பு ரசிக்கும்படி இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தற்போது அந்தப் படத்தின் பெயரை 'ஆயிரத்தில் இருவர்' என்று மாற்றி உள்ளார் சரண். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும்நிலையில் உள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வமான செய்திகளை மீடியாக்களிடம் பகிர இருக்கிறார் சரண்.