ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்திற்கு கிட்னா என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக சிறப்பாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இதற்கு முன் சுப்பிரமணியபுரம் உட்பட வேறு சில படங்களிலும் நடித்துள்ள அவர் தற்போது தமிழ் மட்டுமின்றி, மலையாளம் கன்னடத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடித்து முடித்த உடன், அதாவது அக்டோபர் மாதம் கிட்னா படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் சமுத்திரக்கனி!
கிட்னா என்றால் என்ன?
கிருஷ்ணா என்பதன் சுருக்கம்தான் - கிட்னா. கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தைப் பற்றிய கதை என்பதால் கிட்னா என்று பெயர் வைத்திருக்கும் சமுத்திரக்கனி, இப்படம் நான்கு காலகட்டங்களில் நடப்பது மாதிரியான கதை என்றும் கோடிட்டுக்காட்டுகிறார். கிட்னா படத்தை இயக்குவதோடு, படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி.
இந்தப் படத்தில் தன்ஷிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு இதில் மாறுபட்ட கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. தன்ஷிகா தவிர அமலாபாலுக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அவர் சம்மதம் சொன்ன பிறகு கிட்னா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.