ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' இந்தித் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் 'டப்' செய்யப்பட்டு 'மேடம் இன் நியூயார்க்' என்ற பெயரில் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதியன்று ஜப்பான் முழுவதும் வெளியானது. 33 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இதுவரை 4,20,000 டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். '3 இடியட்ஸ்' படத்திற்குப் பிறகு ஜப்பானில் வெளியான ஒரு இந்திப் படம் வசூல் செய்த இரண்டாவது மிகப் பெரிய தொகை இது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் ஹாங்காங், தைவான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வெளியானதைத் தொடர்ந்து ஜப்பானிலும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டு பிரமோஷனுக்காக ஸ்ரீதேவி ஜப்பானுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடித்த ஹிந்திப் படம் உலக அளவில் வரவேற்பு பெற்று வருவது குறித்து ஸ்ரீதேவி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளாராம். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக காத்திருக்கும் ஸ்ரீதேவி, விரைவில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை பிரபல இயக்குனர் பால்கியின் மனைவியான கௌரி ஷிண்டே இயக்கியிருந்தார். அஜித்தும் படத்தில் ஒரு 'கேமியோ' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் ரசிகர்களிடம் ரஜினிகாந்தை அடுத்து ஸ்ரீதேவியும் பிரபலமாகிவிட்டார்.