ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
சமீபகாலமாக படங்களை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக படங்கள் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளிவந்து விட்டது என்று சொல்லி கமிஷனர் ஆபீசுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புகார் மனு அளித்து வந்தனர். அதோடு அந்த செய்தியையும் மீடியாக்களில் பரபரப்பாக வெளியிட்டு பப்ளிசிட்டியை தேடிக்கொண்டனர். இன்னும் சிலர் படம் வெளியான இரண்டொரு நாட்களிலேயே திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டதாக சொல்லியும் புகார் அளித்து வந்தனர்.
ஆனால், தற்போது அப்படி யாரும் புகார் கொடுப்பதில்லை. மாறாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இணைத்து பரபரப்பு கூட்டி வருகின்றனர். இதில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியை மட்டமாக சித்தரித்து தனுஷ் வசனம் பேசி நடித்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு அப்பட டைரக்டர் வேல்ராஜ் வருத்தம் தெரிவித்தபோதும், அது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகப்போவதாக அந்த பள்ளி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனுஷ் புகைப்பிடிப்பது போன்று சென்னை நகரமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தது. அதையடுத்து அந்த போஸ்டர்களை உடனடியாக நீக்குமாறு அப்படக்குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதனால் தற்போது அந்த போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அகற்றியுள்ளனர். பல இடங்களில் அதே இடத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.