சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பெரும்பாலும் சினிமாவில் சன்னிலியோன் போன்ற சில நடிகைகள்தான் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் யாரும் அந்த மாதிரி நடிப்பதில்லை. அதிலும் முன்னணி ஹீரோக்களை சொல்லவே வேண்டாம். தங்களது இமேஜை பாதுகாத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.
ஆனால், அமீர்கான் நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் பி.கே. இந்த படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக நிற்கும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கையில் ஒரு டேப்ரெக்கார்டரை வைத்து தனது முன்பக்கத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறார். இதனால் அமீர்கானின் மானம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் இணையதளங்களில் வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதோடு சில ரசிகர்கள் அமீர்கானின் நிர்வாண கோலத்தைப்பார்த்து ஏராளமான கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சன்னிலியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட கவர்ச்சி நடிககைளுக்கு போட்டியாக அமீர்கான் இந்த கோலத்தில் களமிறங்கியிருப்பதாக கேலியும், கிண்டலும் கலந்து ஏராளமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
இதற்கு அமீர்கான் வெளியிட்டுள்ள அவசர செய்தியில், இப்படியொரு காட்சி அந்த படத்திற்கு அவசியம் தேவைப்பட்டது. அதன்காரணமாகவே இமேஜ் ப்றறி கவலைப்படாமல் நடித்தேன். மேலும், படம் திரைக்கு வரும்போது இப்படியொரு காட்சியில் நான் நடித்தது அவசியம்தான் என்று ரசிகர்கள் அனைவருமே சொல்வார்கள் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
மேலும், அமீர்கான் கடைசியாக நடித்த தூம்-3 படம் 400 கோடி வசூலித்தது. ஆனால் இந்த படம் இப்போதே சர்ச்சையை உருவாக்கியிருப்பதால். அதை விட வசூலில் பெரும் சாதனை புரியும் என்று கூறப்படுகிறது.