சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பெரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரன், கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. ஜெமினி-சாவித்திரியின் பேரன் அபினய், ராமானுஜனாக நடித்திருந்தார். பாமா அவரது மனைவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர சுஹாசினி, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் இப்படத்தை இந்தாண்டு செப்டம்பரில், டொரன்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதுகுறித்து கேம்பர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், ராமானுஜன் படம் அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்கிற படம். அதோடு அவரது சாதனையையும் விளக்கிய படம். ராமானுஜனின் வாழ்க்கையை உலகளவில் சொல்லவே வோன் ரயான்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இங்கு திரையிட உள்ளோம் என்கிறார்.