சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
'கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்ரமுடன் முதன் முதலாக சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு முதலில் 'இடம் மாறி இறங்கியவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... அந்தத் தலைப்பை மாற்றிவிட்டு 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற தலைப்பை வைத்தனர். ஆனாலும், இந்த தலைப்பை அப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டனோ தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸோ அதிகாரபூர்வமாக வெளியே சொல்லவில்லை.
அதே நேரம், படக்குழுவினர் மட்டும் தற்போது இந்த தலைப்பை பயன்படுத்தி வருகின்றனர். அஜித் படத்தின் தலைப்பு மட்டும்தான் ரகசியமாக வைக்கப்படும். அவரது பாணியில் தலைப்பை ரகசியமாக வைக்க ஆரம்பித்துவிட்டாரா விக்ரம்? என்று விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, தலைப்பு விஷயத்தில் அவர் தலையிடவே இல்லை
என்ற தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்ல, கதைக்கு பொருத்தமான தலைப்பை வையுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம் விக்ரம்.
தலைப்பு விஷயத்தில் விக்ரம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதும், பொறுப்பை தன்னிடமே ஒப்படைத்ததும் இயக்குநர் விஜய்மில்டனை தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது. அதாவது, பத்து எண்றதுக்குள்ளே தலைப்பை மாற்றிவிட்டு வேறு தலைப்பை வைக்கலாமா என அவரை மறு பரிசீலனை செய்ய வைத்துவிட்டதாம்.
எனவே, இதைவிட சிறப்பான தலைப்பை தேட ஆரம்பித்துவிட்டாராம் விஜய் மில்டன்.
படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ளே அறிவிச்சா சரி..!