சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்கா சிக்கந்தர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நேற்று ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளனர். அந்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் 'அஞ்சான்' படக்குழுவினரை, அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் படைத்து வரும் சாதனை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட 'அஞ்சான்' டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த வகையிலும் அஞ்சான் படைத்திருப்பது சாதனைதான்.
எப்படி?
இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களில் 'கோச்சடையான்' படத்திற்கு அடுத்தபடியாக 'அஞ்சான்' டீஸரையே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'ஜில்லா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
அதேபோல் ரஜினியின் 'கோச்சடையான்' படத்தின் டிரைலரை இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தை 24 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் 'கத்தி' படத்தின் மோஷன் போஸ்டரை 18 லட்சத்திற்கு மேற்பட்டோரும் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது 'கோச்சடையான்' படம் முதல் இடத்தையும், 'அஞ்சான்' படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த புள்ளிவிவரம் சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.