சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
நடிகை ஹன்சிகா நடிப்பு தவிர அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தான் நடத்தி வரும் குழந்தைகள் நலபாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க தீர்மானித்திருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா வரைந்த ஓவியம் ஒன்றை ஒருவர் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அந்த பணத்தை குழந்தைகளின் அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகாவின் தாயார் டாக்டர் மோனா கூறியிருப்பதாவது: ஹன்சிகாவை தேடி அவரது ரசிகரும், எங்கள் குடும்ப நண்பருமான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஹன்சிகாவின் ஓவியத்தையும், அதன் நோக்கத்தையும் புரிந்துகொண்டு ஹன்சிகா வரைந்த ஓவியத்தை 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொண்டார்.
தற்போது தன் பள்ளி தோழிகளுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஹன்சிகா வருகிற 5ந் தேதி இந்தியா வருகிறார். வருகிற ஆகஸ்ட் 9ந் தேதி அவருக்கு பிறந்த நாள். வழக்கமாக ஒரு குழந்தையைத்தான் அவர் தத்தெடுப்பார். இந்த பிறந்த நாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார் என்றார்.