சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்த முண்டாசுபட்டி கடந்த ஜூன் 13ந் தேதி வெளிவந்தது. இன்றுடன் முண்டாசுப்பட்டி 50வது நாளை நிறைவு செய்கிறது. இதே நாளில் சி.வி.குமாரின் சரபம் வெளிவருவது குறிப்பிடத் தகுந்த அம்சம்.
முண்டாசுபட்டியில் விஷ்ணு, நந்திதா, காளிவெங்கட் நடித்திருந்தார்கள். சான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். வெற்றியை ருசித்து பல வருடங்களாகிவிட்ட விஷ்ணுவிற்கு இந்தப் படம் புது தெம்பை கொடுத்திருக்கிறது. காமெடியனாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த காளி வெங்கட்டிற்கு முண்டாசு பட்டி ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. இசை அமைப்பாளராக அறிமுகமான எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன் ஷான் ரோல்டனுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறது.
சத்யம், எஸ்கேப், பிவிஆர் காம்ளெக்கில் 50 நாளை தொட்டிருந்தாலும். பிற ஊர்களில் செகண்ட் ஷிப்டிங்காக ஓடிக் கொண்டிருக்கிறது. 7 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 20 கோடி வரை வசூலித்திருப்பதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.