சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது தெலுங்கு தொலைக்காட்சியில் மேலோ எவரு கோடீஸ்வரலுடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி இது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து குறைந்து விடுவதாக சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மோகம் கொண்டு திரிகிறார்கள் ஆந்திர மக்கள்.
"இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் மனதிலும் நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்த அளவுக்கு நிகழ்ச்சியை உயர்த்தி பிடித்த மக்களுக்கு என் நன்றி" என்கிறார் நாகர்ஜுனா. நிகழ்ச்சியின் விளம்பரக் கட்டணம். கோடியை தாண்டியிருக்கிறதாம்.