சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பாலிவுட்டில் 'கான்'களின் ராஜ்ஜியம் நடைபெற்று வந்தாலும் அவர்களுக்குள் அடிக்கடி உரசல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். முக்கியமாக ஷாரூக்கானுக்கும், சல்மான்கானுக்கும் அவ்வளவு பொருத்தம்...? இப்போது முன்னணியில் இருக்கும் சல்மான்கான், ஷாரூக்கான், ஆமிர்கான் ஆகியோர் ஒரேகால கட்டத்தில்தான் இந்தித் திரையுலகில் ஹீரோக்களாக நுழைந்தனர். சொல்லி வைத்தாற் போல் மூவருமே முன்னணிக்கு வந்துவிட்டனர். ஆனால், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பாதை. இவர்களில் சல்மான்கான் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக செட்டிலாகி விட்டார். சமீபத்தில் வெளிவந்த 'கிக்' படத்தையும் சேர்த்து தொடர்ச்சியாக 7 படங்கள் மூலமும் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய ஹீரோ என நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் சல்மான்கான்.
அதேசமயம், பாலிவுட்டில் நீண்ட நாட்களாகவே 'கிங்' என அழைக்கப்பட்டு வருபவர் ஷாரூக்கான்தான். இது பற்றி சமீபத்தில் வாய் திறந்திருக்கிறார் சல்மான் கான். “ஒரு 'கிங்' எப்படியும் இருந்துதான் ஆக வேண்டும். அவர் 'கிங்'காக இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனது இடத்தை பின்னர் தேர்வு செய்து கொள்கிறேன், நான் தற்போது தவறான இடத்தில் இருக்கிறேன், ” என கொஞ்சம் உள்குத்துடனேயே பேசியிருக்கிறார். மக்கள் சல்மான் கானை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும் ஆனால், வினியோகஸ்தர்கள் அவரை வசூல் ராஜா என்று தான் அழைத்து வருகிறார்களாம்.