சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
மலையாள நடிகரான ஆசிப் அலி என்பவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஹாய்..ஐயாம் டோனி'. இந்த படத்தைப் பற்றி இரு இளம் பெண்கள் ஃபேஸ்புக்கில் 'கமெண்ட்' அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலியின் ரசிகர் மன்ற தலைவர் உட்பட 20 பேர் கொண்ட கும்பல், குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கத்தி மற்றும் கூரான ஆயுதங்களுடன் கொலை செய்ய முயற்சித்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு பல கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இனி ஆசிப் அலியின் திரைப்படங்களை கேரளா முழுவதும் திரையிட விட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இன்னும் மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. போராட்டம் வலுப்பெறும் பட்சத்தில் இந்த விவகாரம் மேலும் பெரிதாகும் எனத் தெரிகிறது.
சமீபகாலமாகவே ரசிகர்களும், பொதுமக்களும் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளில் அவர்களது கருத்துக்களை வெளியிட சமூக வலைத்தளங்களை நல்ல ஊடகமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்க இம்மாதிரியான தாக்குதல் சம்பவங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நடைபெறுவது கேலிக்குரியதாகவே கருதப்படுகிறது. இங்கு கூட பல நட்சத்திரங்கள் அவர்களுடைய படங்கள் மோசமாக இருந்தால் கூட அவற்றைப் பாராட்டி எழுதுபவர்களைப் பார்த்துத்தான் பெருமைப்படுகிறார்கள். உண்மையான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் ஒரு சிலரைத் தவிர, பலருக்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படியெல்லாம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தால் தினமும் சமூக வலைத்தள கமெண்ட்டுகளால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க தனிப்படையைத்தான் அமைக்க வேண்டியிருக்கும்.