சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரை அங்கு செயல்பட்டு வரும் திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் மிகவும் வலுவாகவே உள்ளன. நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை நினைத்தால் தேவையற்ற சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். சில நடிகர்களைக் கூட நடிக்க விடாமல் தடை செய்யும் அளவிற்கு வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள். இதனால் அவ்வப்போது ஏதாவது எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் அவற்றையும் உடனே அடக்கி விடுவார்கள். இப்போது மற்ற திரையுலகத்தில் இல்லாத அளவிற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறார்களாம். மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென தனியாக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.
இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான வினயன் தெரிவித்துள்ளதாவது, “நானும் மற்றொரு தயாரிப்பாளரான சையத் கொக்கரும் இணைந்து தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்கான அடிப்படை வேலைகளைத் துவங்கி விட்டோம். இது சம்பந்தமான முடிவு, பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சியில் திரைப்படங்கள், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை ஒளிபரப்பப்படும். தொலைக்காட்சி செயல்பட ஆரம்பித்ததும், இது ஒரு புரட்சிகரமான முடிவாக இருக்கும். திரைப்படங்களை நம்பியே தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன. பல புகழ் பெற்ற திரைப்படங்கள், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படுவதன் மூலம் அவர்கள் நல்ல வருவாயை ஈட்டுகிறார்கள். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடைப்பதில்லை. எங்களது புது தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்பட்டுவிடும். இந்த தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கென்றே தனிப்பட்டு செயல்படும், ” என தெரிவித்துள்ளார்.