Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமன்னாதான் எனது ரோல் மாடல்! -மனீஷா யாதவ் பேட்டி

31 ஜூலை, 2014 - 23:19 IST
எழுத்தின் அளவு:

தமன்னா ஒரு அழகான நடிகை. கிளாமர்-ஹோம்லி என இரண்டுவிதமான கேரக்டர்களுக்கும் அழகாக பொருந்துவார். அதனால் அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டுமென்றுதான் நான் சினிமாவிற்குள் வந்தேன் என்கிறார் மனீஷாயாதவ்.

* இப்ப எந்த படத்துல நடிச்சிக்கிட்டிருக்கீங்க?

நடன மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் ஒரு குப்பைக்கதை என்ற படத்தில் நடித்து வருகிறேன். தலைப்பு குப்பையாக இருந்தாலும், கதை ரொம்ப சுத்தமானது. தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்று படங்களை செலக்ட் பண்ணி வரும் எனக்கு இந்த படம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். தினேஷ் நடிப்புக்கு புதியவர் என்றாலும், கதைக்காகவே இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

மேலும்,. அவர் தினேஷ் நடன மாஸ்டர் என்பதால் பாடல் காட்சிகளில் நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. அதனால் இதுவரை நான் ஆடியதை விட இந்த படத்தில் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி வருகிறேன். எனக்கு பிரத்யேக பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

* இடம் பொருள் ஏவல் படத்தில் கமிட்டாகி வெளியேறியதால் உங்களை மற்ற இயக்குனர்கள் புக் பண்ண தயங்குவதாக கூறப்படுகிறதே?

அந்த படத்தில் இருந்து நான் வெளியேறியதற்கு நான் காரணமல்ல. என்னை முதலில் புக் பண்ணிவர்கள் பின்னர் அந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருந்தவில்லை என்று சொன்னார்கள். அதனால்தான் பிரச்சினையானது. காரணம், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நான் சில படங்களை தவிர்த்து வந்தேன். ஆனால் திடீரென்று அவர்கள் என்னை தவிர்த்ததால் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அதனால்தான் பிரச்சினை நடிகர் சங்கம் வரை சென்றது. மற்றபடி என் பேரில் எந்த தவறும் இல்லை. அதனால் என்னை புக் பண்ண டைரக்டர்கள் தயங்க வேண்டிய அவசியமே இல்லை. நான் எப்போதுமே டைரக்டர்களின் நடிகைதான்.

மேலும், சம்பள விசயத்தில் நான் கறார் செய்வதுமில்லை. என் தகுதி எனக்கு தெரியும். அதனால் முடிந்தவரை தயாரிப்பாளர்களின் பட்ஜெட் என்னவோ அந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன்.

* பட்டயகெளப்பனும் பாண்டியா படத்தில் காமெடி ஹீரோயினியாக நடித்தது பற்றி சொல்லுங்கள்?


வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களுக்குப்பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் இது. ஒரு பஸ்சுக்குள் நடக்கும் கதைதான். அந்த பஸ் டிரைவராக விதார்த், கண்டக்டராக சூரி நடித்துள்ளனர். அந்த பஸ்ஸில் தினமும் கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக நான் நடித்திருக்கிறேன். அப்போது நடக்கும் விசயங்களை கலகலப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் எனக்கும் காமெடி கலந்த காட்சிகளை நிறைய கொடுத்திருக்கிறார். அதனால் இதுவரை காதல் செய்யும் கேரக்டர்களிலேயே நடித்துள்ள நான் முதன்முறையாக இந்த படத்தில் காமெடியிலும் சைன் பண்ணியிருக்கிறேன்.

* நந்திதா, ஸ்ரீதிவ்யா போன்ற புது வரவு நடிகைகளால் உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைவது போல் தெரிகிறதே?

அப்படியெல்லாம் இல்லை. அவர்களுக்கு கிடைக்கிற படங்களில் அவர்கள் நடிக்கிறார்கள். எனக்கு கிடைக்கிற படங்களில் நான் நடிக்கிறேன். மேலும், முதல் படத்திலேயே என்னை நல்லதொரு நடிகையாக காண்பித்து விட்டார் பாலாஜி சக்திவேல். அதனால். எனது நடிப்பு திறமையை முன் வைத்துதான் சான்ஸ் கேட்கிறேன். மேலும், குடும்ப நடிகை என்கிற இமேஜ் எனக்கு தேவையில்லை என்பதால், எல்லாதவிதமான கமர்சியல் கதைகளிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.

* கிளாமரில் உங்களது எல்லை எதுவரை?

படம் பார்க்கிறவர்கள் எந்த அளவுக்கு நடித்தால் முகம் சுழிக்காமல இருப்பார்களோ அதுதான் எனது எல்லை. அந்த வகையில், நான் நடிக்க வருவதற்கு முன்பே எனது ரோல் மாடலாக இருந்தவர் தமன்னா. கிளாமர்-ஹோம்லி என இரண்டு விதமான வேடங்களுக்கும் அழகாக பொருந்துவார். அதனால் அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால் அவரை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடித்து வருகிறேன்.

* ஆனால் அவரைப்போல் இல்லாமல் புதுமுக ஹீரோக்களுடன் நடிக்கிறீர்களே?

அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஆனால் நான் முதல் படத்திலேயே புதுமுக ஹீரோவுடன் நடித்தேன். அதோடு நானும் சின்ன பெண் என்பதால் அதுதான் எனக்கு பொருத்தமாகவும் இருந்தது. இருப்பினும், அதையடுத்து விமல், விதார்த் என்று ஜோடி சேர்ந்து விட்டேன். எதிர்காலத்தில் இன்னும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேருவேன்.

அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால் என நான் டூயட் பாட ஆசைப்படும் ஹீரோக்களின் பெயர்கள், ஒரு பெரிய பட்டியலே உள்ளது என்கிறார் மனீஷாயாதவ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in