ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாண்டிராஜ் தயாரிப்பு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படம் தொடங்கப்பட்டபோது, ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு...! சிம்பு நடிக்கும் மற்ற படங்கள் எப்படி எல்லாம் தாமதமாகுமோ அதைப்போலவே இது நம்ம ஆளு படமும் தாமதமானது. இப்படத்தின் இயக்குநர் கம் தயாரிப்பாளரான பாண்டிராஜ், சிம்பு மற்றும் அவரது டி.ராஜேந்தரை குற்றம் சொன்னார். அதாவது சிம்பு சொன்னபடி கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்றும், அவரது அப்பா டி.ராஜேந்தர் படத்தின் தயாரிப்பு செலவுக்கு பணம் தரவில்லை என்றும் பாண்டிராஜ் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தை சீக்கிரமே முடித்து எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை முடிக்கத் தேவையான பணத்தை தயார் செய்துவிட்டார் டி.ராஜேந்தர். எனவே உற்சாகமான பாண்டிராஜ் மீண்டும் இது நம்ம ஆளு வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். ஆகஸ்ட் 18 முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க விருக்கிறத - இது நம்ம ஆளு.